வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று பீமநகர் மார்சிங்பேட்டை அருகே உள்ள ஒரு வீட்டில் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மின்னலாதேவி (வயது 40) என்ற பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் இதுதொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.