மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.;
துவரங்குறிச்சி,
மணப்பாறை அருகே உள்ள கன்னிவடுக பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 53). தொழிலாளியான இவர் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளநாட்டை அடுத்த கோவில்பட்டி அருகே லஞ்சமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.