காட்டுப்புத்தூர் அருகே மது போதையில் ஆற்றில் குளித்த வாலிபர் சாவு

காட்டுப்புத்தூர் அருகே மது போதையில் ஆற்றில் குளித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-06-20 18:14 GMT
காட்டுப்புத்தூர், 
நாமக்கல் மாவட்டம் ராமபுரம்புத்தூர் காலனியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 22). இவர் நாமக்கல்லில், உள்ள ஒரு கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களுடன் திருச்சி மாவட்டம் வாள்வேல்புத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில், மது வாங்கிக்கொண்டு, காட்டுப்புத்தூர் அருகேயுள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர் ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர்கள் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஹரிஹரனுக்கு போதை அதிகமானதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவருடைய நண்பர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்