காதல் திருமணம் செய்த ஒடிசா மாநில இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை-துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
காதல் திருமணம் செய்த ஒடிசா மாநில இளம்பெண் ஓசூரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
காதல் திருமணம்
ஒடிசா மாநிலம் பாரலஹேமுண்டி பகுதியை சேர்ந்தவர் குணபுயான். இவருடைய மனைவி மண்டோதரி (வயது 22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரப்பள்ளி ராஜாஜிநகர் முதல் கிராசில் குடியிருந்து வந்தனர்.
குணபுயான் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களாக மண்டோதரி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் மண்டோதரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி 1½ ஆண்டுகளில் அவர் தற்கொலை செய்து கொண்டதால், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரும் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.