வேறு ஒருவருடன் தொடர்பு: கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை

பாகலூர் அருகே கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-20 17:57 GMT
ஓசூர்,

பாகலூர் அருகே உள்ள பெரிய தாசரப்பள்ளி தின்னா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி ஆனந்தம்மா (வயது 35). இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருந்தது. இதை அறிந்த சுரேஷ், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தம்மா அங்கேப்பள்ளியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்