இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-06-20 17:34 GMT
திருக்கடையூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய ஜனநாயக வாலிபா சங்கத்தினர், பெட்ரோல், டீசல்  விலை  உயர்வை  கண்டித்து திருக்கடையூர் பஸ் நிலையத்தில் இருந்து, சன்னதி தெரு  வரை நூதன முறையில் காரை கயிறு கட்டி இழுத்து கோஷமிட்டபடி சென்றனா். 

மேலும் செய்திகள்