அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் பழனிசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், காங்கேயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என். நடராஜ், காங்கேயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, மாநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாணவர் அணி செயலாளர் சதீஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணிச்செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேஷ், பகுதி செயலாளர்கள் கருணாகரன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், திலகர்நகர் சுப்பு, பட்டுலிங்கம், பாலசுப்பிரமணியம், ஹரிஹரசுதன் வேலுமணி, மாநகர் மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் பா.சு.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சசிகலாவுக்கு கண்டனம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சிறப்பாக வழிநடத்தி செல்வதற்கு பாராட்டுக்கள்.
* சட்டமன்ற தேர்தலின் போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக பகிரங்கமாக செய்தி வெளியிட்ட சசிகலா தேர்தல் முடிந்த பிறகு அரசியல் முக்கியத்துவம் தேடிக்கொள்ளவும், கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசி வருகிறார். இவர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. சசிகலா தொலைபேசியில் பேசும் போது சாதிய உணர்வை தூண்டும் விதமாக பேசுகிறார். ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்துவரும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதற்கு திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க.வுக்கும், சசிகலாவுக்கும் எந்தவிதமான தொடர்பும், சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
இறப்பு சான்றிதழ்
*அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்க பாடுபடுவோம். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வது. கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழில் உண்மையான காரணத்தை குறிப்பிட்டு வழங்க வேண்டும்.
*கட்டுமான பொருட்களின் விலை உயர்வை உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.