ஆத்தூர் அருகே விபத்தில் வேன் டிரைவர் படுகாயம்

ஆத்தூர் அருகே விபத்தில் வேன் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-06-20 13:58 GMT
ஆறுமுகநேரி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோம மங்கலத்தைச் சேர்ந்த மயில்சாமி நாடார் மகன் மணியப்பன் (வயது 50). இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது வேனில் முக்காணி வந்தார். அங்கு வாழைத்தார் ஏற்றுவதற்காக, தனது வேனை ஓரமாக நிறுத்திவிட்டு டீக்கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திருச்செந்தூரிலிருந்து வடக்கு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மணியப்பன் மீது வேகமாக மோதியது. இதில் இவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணையில் வேகமாக வண்டியை ஓட்டியவர் முக்காணி குருவித்துறை சேர்மராஜ் மகன் கவிராஜ் ( 19 ) என்பது தெரியவந்தது. இவர் மீது ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்