நாகூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு - வாலிபர் படுகாயம்
நாகூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
நாகூர்,
காரைக்கால் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது50). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கீழ்வேளூர் அருகே உள்ள ஓடாச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
நாகூர் - கங்களாஞ்சேரி சாலையில் எதிரே நரிமணம் அருகே உள்ள பெருஞ்சாத்தான்குடியை சேர்ந்த செல்லமுத்து (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், பன்னீர்செல்வம் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலயே பரிதமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த செல்லமுத்துவுக்கு நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.