தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
தலைவாசல்:
தலைவாசல் அருகே வீரகனூர் பகுதியில் ஒரு வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் ஆத்தூர் அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 25) என்பவரை வீரகனூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. எனவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு அபினவ் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வெங்கடேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள வெங்கடேசிடம் வழங்கப்பட்டது.