ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா
ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
ஈரோடு
ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
நலத்திட்ட உதவிகள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு இடையன்காட்டு வலசில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா செய்திருந்தார்.
சிறுபான்மை பிரிவு
அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் 3 இடங்களில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஆட்டோ டிரைவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் முக கவசம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், துணைத்தலைவர்கள் அரவிந்த்ராஜ், கோதண்டபாணி, ஈஸ்வரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, துணைத்தலைவர் பாஷா, 4-ம் மண்டல தலைவர் சித்திக், முன்னாள் வட்டார தலைவர் செந்தில்ராஜா, எஸ்.சி. பிரிவு தலைவர் சின்னச்சாமி, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், சேவாதள தலைவர் ஆறுமுகம், நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, ஐ.என்.டி.யு.சி. நிர்வாக தலைவர் ரவி, பொதுசெயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, வின்சென்ட், சச்சிதானந்தம், கராத்தே யூசுப், நிர்வாகிகள் கிருஷ்ணன், பாபு என்கிற வெங்கடாசலம், விஜய்கண்ணா, சிவா, டிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.