கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் பழுதினால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2021-06-19 19:50 GMT
வள்ளியூர்:
கூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் பழுதினால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

2-வது அணு உலை எந்திரத்தில் பழுது

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 2-வது அணு உலையில் உள்ள டர்பைன் எந்திரத்தில் நேற்று மதியம் 1.50 மணிக்கு திடீரென்று தொழில்நுட்ப கோளாறால் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து அந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை எந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரி செய்யும் பணியில் இந்திய மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது.

மின் உற்பத்தி பாதிப்பு

2-வது அணு உலையில் உள்ள எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் 25-ந்தேதி 2-வது அணு உலையில் பழுது ஏற்பட்டது. பின்னர் அதனை சரி செய்து, கடந்த 27-ந்தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 23 நாட்களில் மீண்டும் அங்கு பழுது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்