நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு மோசடி; 2 பேர் சிக்கினர்
கோவில் திருப்பணி என கூறி நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு நூதன முறையில் மோசடி செய்த 2 பேர் போலீசில் சிக்கினர்.;
மதுரை,
கோவில் திருப்பணி என கூறி நகை வியாபாரியிடம் 5 பவுன் தங்க காசு நூதன முறையில் மோசடி செய்த 2 பேர் போலீசில் சிக்கினர்.
நகை மோசடி
அப்போது மெய்யப்பன் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு மேலவெளிவீதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு தனது கணக்குபிள்ளை கருப்பையா இருக்கிறார்.
அவரிடம் நகையை கொடுத்து விட்டு, வாடிபட்டிக்கு வந்து தன்னிடம் பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். அதை நம்பிய அழகப்பன் 5 பவுன் நகையை அவரிடம் கொடுத்து விட்டு வாடிப்பட்டிக்கு சென்றார். அங்கு மெய்யப்பனை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் அணைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் தன்னிடம் பணம் தருவதாக ஏமாற்றி அவர்கள் நகையை மோசடி செய்தது தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார்.
2 பேர் கைது
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தானப்பமுதலி தெரு சந்திப்பில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அருணாச்சலம் (65), வரதராஜன் (70) என்பதும். அவர்களுக்கு இந்த நகை மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அருணாசலம் மெய்யப்பனாகவும், வரதராஜன் கருப்ைபய்யாவாகவும் நகை வியாபாரியிடம் நடித்தது தெரிய வந்தது. செல்போன் சிக்னல் மூலமாக இந்த மோசடி ஆசாமிகளை போலீசார் பிடித்தனர்.பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 5 பவுன் தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.
கமிஷனர் பாராட்டு
----