முதியவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
நெல்லை அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவருடைய தம்பி அய்யாதுரை. இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் தனது வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அய்யாதுரை, அவருடைய மகன் மாலையப்பன் மற்றும் சேது (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் அய்யப்பன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து அய்யாதுரை மற்றும் சேதுவை நேற்று கைது செய்தார். மாலையப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.