டீக்கடை உரிமையாளர் தற்கொலை

டீக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-06-20 00:31 IST
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சர்க்கரைநோய் மற்றும் நெஞ்சில் சளி இருந்து வந்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக வீட்டிலிருந்த படியே மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். 
இந்தநிலையில் நேற்று காலை சிவக்குமாருக்கு திடீரென  நெஞ்சுவலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. 
இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள செல்போன் டவரில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொைல குறித்து மோகன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்