சாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முறுக்கு வியாபாரி பலி

சாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முறுக்கு வியாபாரி பலியானார்.

Update: 2021-06-19 18:52 GMT
தோகைமலை
மணப்பாறை அருகே உள்ள தீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி கிருஷ்டின் விமலாஜூலி. இவர் முசிறியில் சுகாதார ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் வேலைக்காக முசிறிக்கு தனது மொபட்டில் சென்று வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக கிருஷ்டின் விமலாஜூலி தனது மொபட்டில், துணைக்காக முறுக்கு வியாபாரியான தனது மாமா சவரிமுத்துவையும் (52) அழைத்து சென்றுள்ளார். தோகைமலை சின்னரெட்டிபட்டி போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே முறிந்து கிடந்த புளிய மரக்கட்டையில் மொபட் மோதியது. 
இதில் மொபட்டின் பின்னால் அமர்ந்து வந்த சவுரிமுத்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். கிருஷ்டின் விமலாஜூலி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சவரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சவரிமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்