கொரோனா தடுப்பூசி முகாம்

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-19 18:51 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டியன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவபிரகாசம், கழக பிரமுகர் சிவசங்கரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபுஜி, நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் தமிழ்காந்தன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், அய்யப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர். 
அதேபோல சாத்தூர் அருகே முத்தார்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கொரோனா நிவாரண நிதி உதவியை வழங்கினார். இதில் சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல அதேபகுதியில் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினையும் அமைச்சர் ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்