காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை

காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-19 18:37 GMT
திருவெறும்பூர், 
துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டைபெரியார் நகரை சேர்ந்தவர் பார்த்தீபன்(வயது 28). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் காதலை கூறிய போது அவா் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பார்த்தீபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்