திருச்சியில் கொரோனாவுக்கு 9 பேர் பலி
திருச்சியில் கொரோனாவுக்கு 9 பேர் நேற்று உயிரிழந்தனர்;
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 242 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 66,876 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 2,952 பேர் உள்ளனர். 510 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 63,091 ஆகும்.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 4 ஆண்கள், 5 பெண்கள் என 9 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்தது.
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்றைய நிலவரப்படி ஆக்சிஜன் படுக்கை 1,194, சாதாரண படுக்கை 1,183, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை 205 என மொத்தம் 2,582 படுக்கைகள் காலியாக உள்ளன.