திருச்சி நகரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி நகரில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

Update: 2021-06-19 18:29 GMT
திருச்சி,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி நகரிய கோட்ட செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட டி.டி.ரோடு, கீரை கொல்லை, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, டாக்கர் ரோடு, குழுமணி ரோடு, லிங்கா நகர், மருதாண்டாகுறிச்சி, சீராதோப்பு, வயலூர் மெயின் ரோடு, வாசன் நகர், மதுரை ரோடு, அருணாசல காலனி, பீச்சான் குளம், செங்குளம் காலனி, பாலக்கரை மெயின் ரோடு, பாரதி தெரு, சர்தார் பட்டேல் தெரு, உக்கிர காளியம்மன் கோவில் பின்புறம், பழைய கோவில் தெரு, ஆட்டுக்கார தெரு, மல்லிகைபுரம், துரைசாமிபுரம், இருதயபுரம், வரகனேரி, குழுமிகரைரோடு, காவிரி ரோடு, மேல தேவதானம், சஞ்சீவி நகர் கீழ தேவதானம், சங்கரன்பிள்ளை ரோடு, எஸ்.ஆர்.எம். கல்லூரி ரோடு மற்றும் வடக்கு ஆண்டாள் தெரு ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி மற்றும் மின் பாதை அருகில் உள்ள மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்த பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்