திருச்சி பெரியமிளகுபாறையில் தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்
திருச்சி பெரியமிளகுபாறையில் தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானது.
திருச்சி,
திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (வயது 45). இவரது வீட்டின் அருகே குப்பை கொட்டப்பட்டு குவிந்து கிடந்தது. நேற்று முன்தினம் காலை அந்த குப்பைக்கு யாரோ தீவைத்து சென்றனர். அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி ஜீவாவின் குடிசையில் பிடித்து வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பர்னிச்சர் சாமான்கள், சான்றிதழ்கள் ஆகியவை எரிந்து நாசமாகின. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.என்.நேரு, ஜீவா வீட்டுக்கு நேரில் சென்று ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரிசி, மளிகை, காய்கறிகள், படுக்கை விரிப்புகள், புத்தாடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், தீ விபத்தில் சேதமடைந்த குடிசையை புனரமைத்து தரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.