களக்காடு வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர் கைது

களக்காடு வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-19 18:26 GMT
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் வனச்சரகர் பாலாஜி, வனவர் ராம்பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் வடகரை பீட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் காட்டுக்குள் பதுங்கியிருந்த ஒருவர் தப்பி ஓடினார். இதைப்பார்த்த வனத்துறையினர் அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த ஜான் மகன் டேனியல்ராஜ் என்பதும், அவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து, நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்