ஆம்பூர் அருகே காரில் மணல் கடத்தியவர் கைது

ஆம்பூர் அருகே காரில் மணல் கடத்தியவர் கைது

Update: 2021-06-19 17:32 GMT
ஆம்பூர்

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு மணல் கடத்தல் நடப்பதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நேற்று தனிப்படை போலீசார் மாதனூரை அடுத்த பாலூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் காரை மணலுடன் பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
மேலும் காரை ஓட்டி வந்த உடையராஜபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்