தண்டராம்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்;
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே தானிப்பாடி பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தானிப்பாடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதாக தானிப்பாடி கிராம நிர்வாக அலுவலர் முத்துவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு சிறுமியின் வீட்டிற்கு தானிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சமூக நல அலுவலர் அம்சவல்லி, சைல்ட் லைன் அலுவலர்கள் சென்று பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் சிறுமியை மீட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.