காவேரிப்பாக்கம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி முதியவர் பலி

காவேரிப்பாக்கம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி முதியவர் பலி;

Update: 2021-06-19 17:11 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கத்தை அடுத்த காட்டேரி கிராமத்தில் உள்ள பழைய கல்குவாரி குட்டையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டனர். அப்போது பிணமாக கிடந்தவர் ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்த மணி (வயது 68) என்பது தெரிய வந்தது. 

குளிக்க சென்றபோது கால்வழுக்கி குட்டையில் மூழ்கி இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்