சிறுமியை கடத்தி திருமணம் செய்து 10 மாதங்களாக குடும்பம் நடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பர்கூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்து 10 மாதங்களாக குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-06-19 17:03 GMT
பர்கூர்:
சிறுமி கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது உறவினர் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 26). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி கடத்தி சென்றார்.
பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டு 10 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார். மேலும் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கைது
இந்தநிலையில் சூர்யாவிடம் இருந்து அந்த சிறுமி  தப்பித்து, பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் சூர்யா மீது புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை கடத்தி, திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாக வாலிபர் சூர்யாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்