ஓசூரில் ரவுடி கொலை வழக்கில் 2 பேர் கைது

ஓசூரில் ரவுடி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-19 17:03 GMT
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நல்லூர் ராஜாஜி லே அவுட்டை சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 29). ரவுடியான இவர் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்துள்ளார். கொலை முயற்சி வழக்கில் கடந்த 10-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில், கடந்த 17-ந் தேதி இரவு பேடரப்பள்ளியில் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த சபரிசிங் (29), கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த நவீன் (31), ஓசூர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த முரளி (29) ஆகியோர் அபிலாசை கொலை செய்தது தெரியவந்தது. பண விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சபரிசிங், முரளி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நவீனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்