322 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 322 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-19 16:52 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 41,356 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 321 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 38,759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 148 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,504 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 790 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,549 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 1,634 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 25,503 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23,898 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 187 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 1,200 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 174 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,503-ல் இருந்து 25,677-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,592 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்