ஆரணியில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர் திடீர் சாவு

ஆரணியில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர் திடீர் சாவு

Update: 2021-06-19 16:52 GMT
ஆரணி

ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் பி.அன்பு (வயது 48). இவர், ஆற்காடு சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பால் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
 
அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். அவர், கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அன்பு திடீரென உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்