பாலக்கோடு மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு
பாலக்கோடு மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவடைந்தது.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, அத்திமுட்லு, மல்லாபுரம், காரிமங்கலம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவமழை பொழிவினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய் உள்ளூர் தேவை போக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் திருமணம், சுபநிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்கள் குறைந்த அளவே நடைபெறுவதால் தேங்காய் தேவை குறைந்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிந்துள்ளது. பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் ஒரு தேங்காய் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.