வியாபாரி வீட்டில் ரூ1 லட்சம் நகை பணம் திருட்டு
திருக்கோவிலூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ1 லட்சம் நகை பணம் திருட்டு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 37). இவர் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் கடை வைத்து பழைய மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராமலிங்கம் கடைக்கு வந்துவிட்டார். இவரது மனைவி மற்றும் மகன் இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றனர். இன்னொரு மகன் விளையாட சென்றார்.
இந்த நிலையில் விளையாட சென்றிருந்த மகன் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து உடனடியாக ராமலிங்கத்துக்கு தகவல் கொடுத்தார். உடனே அவரும் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். திருடு போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.