பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கோவில்பட்டி அருகே பெண்ணிடம் மர்மநபர் சங்கிலி பறித்துச் சென்றார்.;

Update:2021-06-19 22:13 IST
கோவில்பட்டி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி லதா (வயது 32). இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மாணவிகள் விடுதியில் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். லதா தனது ஸ்கூட்டரில் கொப்பம்பட்டி அருகே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினரை சந்திக்க சென்றாராம். முடுக்கலாங்குளம் அருகே சென்றபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், லதாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி, மணிப்பர்சில் வைத்திருந்த ரூ.500, ஏ.டி.எம். கார்டு மற்றும் குடும்ப அட்டையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்