மின்கம்பத்தில் லாரி மோதியது

புதூர் ஏரிக்கரையில் மின்கம்பத்தில் லாரி மோதியது

Update: 2021-06-19 16:27 GMT
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சங்கராபுரம் நோக்கிசென்று கொண்டிருந்தது. புதூர் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் லாரியை ஓரம் கட்டினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

அப்போது மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசியதால் தீப்பொறிகள் பறந்தன. இதையடுத்து மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதால் மின் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக புதூர் ஏரிக்கரையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்