வடமதுரையில் ரெயிலில் அடிபட்டு 2 மயில்கள் பலி

வடமதுரையில் ரெயிலில் அடிபட்டி 2 மயில்கள் பலியாகின.

Update: 2021-06-19 16:22 GMT
வடமதுரை:
வடமதுரை ெரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் உள்ள பெயர் பலகை அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் 2 மயில்கள் இறந்த நிலையில் கிடந்தன. அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அய்யலூர் வன காப்பாளர் கிரேசி உஷாதேவி, வனக்காவலர் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மயில்களின் உடலை மீட்டனர். 
பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், 2 மயில்களும் நேற்று முன்தினம் நண்பகல் வேளையில், சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து வடமதுரை அரசு கால்நடை டாக்டர் நாகராஜன், மயில்களின் உடலை பரிசோதனை செய்தார். அதில், இறந்துபோனது ஆண் மயில் ஒன்றும், பெண் மயில் ஒன்றும் என்பதும், அவை ரெயிலில் அடிபட்டு பலியானதும் உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த 2 மயில்களின் உடலை வனப்பகுதியில் புதைத்தனர்.

மேலும் செய்திகள்