திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு;

Update: 2021-06-19 16:05 GMT
திருப்பத்தூர்
திருப்பத்தூரை அடுத்த மொளகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவர் திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்தார். 

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம், 5 பவுன் நகை, டிவி, ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்