அரியவகை பாம்பு பிடிபட்டது

அரியவகை பாம்பு பிடிபட்டது;

Update:2021-06-19 20:56 IST
கோவை

கோவை சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று வந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த பாம்பை விரட்ட முயன்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர்.

 இதில், எண்ணெய்ப்பனையன் என்ற அரிய வகை பாம்பு என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பாம்பு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்