போலி பிறப்பு சான்றிதழ் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு
பாஸ்போர்ட்டு பெற போலி பிறப்பு சான்றிதழ் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் நாகநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சீனிநாகூர்கனி மகள் ஜமீல்ரியாத். இவர் பாஸ்போர்ட் பெற மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பத்துள்ளார். இவரின் விண்ணப்பத்துடன் சமர்ப் பிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழின் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அதன் உண்மை தன்மையை அறிய சம்பந்தப் பட்ட துறையினரிடம் அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பிறப்பு சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட்டு பெற முயன்றது தொடர்பாக மதுரை பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.