பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு

Update: 2021-06-19 14:15 GMT
கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கனாக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மனைவி சரோஜா(வயது 55). இவர் நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியில் உள்ள தனது தேயிலை தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை புதர் மறைவில் இருந்து வந்த பாம்பு ஒன்று கடித்துவிட்டு சென்றது. 

இதை அறியாமல் அவர் தொடர்ந்து பச்சை தேயிலை பறித்து கொண்டு இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் சரோஜா மயங்கி விழுந்தார். இதை கண்ட அருகில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்