சீர்காழியில் தீயில் எரிந்து கூரை வீடு நாசம் - ரூ.5 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் சேதம்

சீர்காழியில் தீயில் கூரை வீடு எரிந்து நாசமாகியது. இதில் ரூ.5 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.;

Update: 2021-06-19 10:59 GMT
சீர்காழி,

சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வன் மகன் வீரமணி (வயது 32). எவர் சில்வர் பாத்திரம் வியாபாரியான இவர், தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், உணவு பொருட்கள், உடை, வியாபாரத்திற்கு வைத்திருந்த எவர்சில்வர் பாத்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் பொன்னியின் செல்வன், கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி, சீர்காழி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது

மேலும் செய்திகள்