சேலம் அருகே மின்சாரம் தாக்கி மயில் சாவு

சேலம் அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.

Update: 2021-06-18 23:02 GMT
சேலம்:
சேலம் அருகே உள்ள இரும்பாலை பகுதியில் விவசாய தோட்டங்களிலும், குடியிருப்புகளிலும் மயில்கள் சுற்றித்திரிகின்றன. இந்தநிலையில் நேற்று காலை அங்கு சுற்றித்திரிந்த மயில் ஒன்று பறந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் மயில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் வனத்துறையினர் இறந்து கிடந்த மயிலை மீட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்து விட்டனர். இறந்தது பெண் மயில் என்று வனத்துறையினர் கூறினர்.

மேலும் செய்திகள்