ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-06-18 21:33 GMT
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 7-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7 நாட்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 13, 14-ந் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ந்தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
நிறுத்தம்
அதைத்தொடர்ந்து கடந்த 16-ந்தேதி ஈரோடு மாவட்டத்துக்கு 15 ஆயிரத்து 600 கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து கடந்த 17-ந்தேதி புறநகர் மாவட்டங்களில் உள்ள 50-க்கு மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நேற்று முன்தினம் மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் 2-ம் டோஸ் போடப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகை அந்தந்த தடுப்பூசி போடும் மையங்கள் முன்பு வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் வந்ததும், பொதுமக்களுக்கு போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்