மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-06-18 21:16 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சாத்தாம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூட்டையோடு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் மதுபாட்டில்கள் இருந்தன. இது குறித்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் சாத்தாம்பாடி செங்கான் தெருவைச் சேர்ந்த நீலகண்டன்(வயது 23) என்பதும், மறைத்து வைத்து விற்பனை செய்வதற்காக ஸ்ரீபுரந்தான் பகுதியில் இருந்து சாத்தாம்பாடி பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தியதும், தெரியவந்தது. இதையடுத்து நீலகண்டனிடம் இருந்த 47 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து நீலகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்