இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
அரியலூர்:
இன்று மின் நிறுத்தம்
அரியலூர் மற்றும் தேளூர் துணை மின் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் அம்மாகுளம், தவத்தாய்குளம், பார்ப்பனச்சேரி, வாரணவாசி, மல்லூர், ஒரத்தூர், வி.கைகாட்டி, நாகமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஆதனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் அரியலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராஜீவ்நகர், வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், காட்டு பிரிங்கியம், பெரியநாகலூர், புதுப்பாளையம், சிறுவலூர், சுப்பராயபுரம் ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது. பராமரிப்பு பணிகள் விரைவில் முடிந்தால் அதற்கு முன்பே மின் வினியோகம் கொடுக்கப்படும் என்று அரியலூர் (இயக்குதலும் காத்தலும், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் பகுதியில்...
இதேபோல் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், பாப்பாக்குடி, தா.பழூர், ஓலையூர், நடுவலூர், உடையார்பாளையம், அய்யூர், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, பெரியத்தூர், கூவத்தூர், அய்யப்பநாயக்கன்பேட்டை, திருக்களப்பூர், பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், செங்குந்தபுரம், இலையூர், வாரியங்காவல், தேவனூர், சூரியமணல், துளாரங்குறிச்சி, கச்சிபெருமாள், அங்கராயநல்லூர், சிலால், பிலிச்சுகுழி, தேவாமங்கலம், ஆமணக்கந்தோண்டி, பிச்சனூர், டி.மேலூர், த.பொட்டக்கொல்லை, கீழவெளி, இருகையூர், காரைக்குறிச்சி, தென்னவநல்லூர், வேம்புகுடி, ஆலம்பள்ளம், புலியங்குழி மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் அத்தியாவசிய, அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தில் இருந்து 3 மணி நேரம் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கீழப்பழுவூர்
மேலும் திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பூண்டி, மலத்தான்குளம், மேலப்பழுவூர், கோக்குடி, கீழையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.