மைசூருவில் இருந்து பல நகரங்களுக்கு மீண்டும் ரெயில்கள் இயக்கம்

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து மைசூருவில் இருந்து பல நகரங்களுக்கு ரெயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

Update: 2021-06-18 20:30 GMT
மைசூரு: கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து மைசூருவில் இருந்து பல நகரங்களுக்கு ரெயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. 

ரெயில்கள் இயக்கம்

கொரோனா 2-வது அலை காரணமாக மைசூருவில் இருந்து பல நகரங்களுக்கு இயக்கப்படும் ரெயில்சேவையை மைசூரு மண்டல ரெயில்வே ரத்து செய்திருந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

இதனால் மைசூருவில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு மீண்டும் ரெயில்களை இயக்க மைசூரு மண்டல ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி மைசூரு-பெங்களூரு சாமுண்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 9.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. 

அதுபோல் மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 9.05 மணிக்கு மைசூருவை வந்தடைகிறது. 

வாரணாசி, ஜெயப்பூர்

மைசூருவில் இருந்து பெலகாவிக்கு தினமும் அதிகாலை 5.50 மணிக்கும், வாரணாசிக்கு செவ்வாய், வியாழக்கிழமை காலை 7.20 மணிக்கும், ஜெயப்பூருக்கு வியாழக்கிழமை, சனிக்கிழமை காலை 10.40 மணிக்கும், தர்பாங்கத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10.40 மணிக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. 

அதுேபால் வெள்ளிக்கிழமை தோறும் மைருவில் இருந்து  கொச்சுவேலிக்கு மதியம் 12.50 மணிக்கும், பாகல்கோட்டைக்கு மதியம் 1.30 மணிக்கும், காச்சிகுடாவுக்கு மதியம் 3.15 மணிக்கும், சோலாப்பூருக்கு பகல் 3.45 மணிக்கும், மயிலாடுதுறைக்கு மாலை 4.30 மணிக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. 

அதுபோல் மைசூருவில் இருந்து செவ்வாய், வியாழக்கிழமைகளில் அஜ்மீருக்கு மாலை 6.35 மணிக்கும், உப்பள்ளிக்கு இரவு 7 மணிக்கும், தாளகொப்பாவக்கு இரவு 7.30 மணிக்கும், சென்னைக்கு இரவு 9 மணிக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் மைசூருவில் இருந்து ஹவுராவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 12.25 மணிக்கும் ரெயில் புறப்பட்டு செல்கிறது. 

மேலும் செய்திகள்