கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-18 19:55 GMT
நெல்லை:

சி.ஐ.டி.யு. மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தினர் தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மோகன் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்களுக்கு கொரோனா நிவாரண நிதி கூடுதலாக வழங்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா தொற்றுநோய் ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு போதுமான அளவு வேலை இல்லை. எனவே தமிழக அரசு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களான செங்கல், சிமெண்டு, இரும்பு கம்பி, மணல், பெயிண்ட் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்