சூதாடிய 20 பேர் கைது
பாளையங்கோட்டையில் விடுதியில் சூதாடிய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை:
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 18 பேர் பணம் வைத்து சூதாட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 18 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாடிய பணம் ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக அந்த விடுதியின் மேலாளர், உதவியாளர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 20 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.