மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2021-06-18 19:29 GMT
களக்காடு:

களக்காடு அருகே உள்ள கலுங்கடியை சேர்ந்தவர் முப்பிடாதி மனைவி நாச்சியார் (வயது 70). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டுக்கு அருகே வந்த போது, அந்த வழியாக மேலப்பத்தையை சேர்ந்த சுப்பையா மகன் ஜெயக்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் நாச்சியார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ஜெயக்குமார் நிற்காமல் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்று விட்டார்.

இதைப்பார்த்த உறவினர்கள் நாச்சியாரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே நாச்சியார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது கணவர் முப்பிடாதி களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்