திசையன்விளை வாரச்சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது

ஊரடங்கு தளர்வு எதிரொலியாக திசையன்விளை வாரச்சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது.

Update: 2021-06-18 19:27 GMT
திசையன்விளை:

திசையன்விளை நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் காய்கறி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில வாரங்களாக வாரச்சந்தை நடைபெறவில்லை.

தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று வாரச்சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது. பஸ் போக்குவரத்து நடைபெறாததால் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது.

மேலும் செய்திகள்