கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழப்பு
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கரூர்
126 பேருக்கு புதிதாக தொற்று
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால், கரூர் உள்பட 11 மாவட்டங்களில் தொற்று இன்னும் வெகுவாக குறையாததால் அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக அந்த மாவட்டங்களிலும் தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் தொற்று குறைந்து வருகிறது. நேற்றைய தினம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 126 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
4 பேர் உயிரிழப்பு
இந்தநியைில் கொரோனா தொற்றால் ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 217 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 856 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.