எந்திரத்தில் கை சிக்கி கூலித்தொழிலாளி சாவு
லாலாபேட்டை அருகே எந்திரத்தில் கை சிக்கியதால் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
லாலாபேட்டை
எண்ணெய் ஆலை
லாலாபேட்டையை அடுத்த தாளியாம்பட்டியில் எண்ணெய் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எள்ளு, தேங்காய் மற்றும் மாவுப் பொருட்களை அரைத்து வருகின்றனர்.
இங்கு, போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி வெள்ளபட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 47) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 16-ந் தேதி அவர், வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கை எந்திரத்தில் சிக்கிக் கொண்டது.
உடனடியாக எந்திரம் நிறுத்தப்பட்டு சுப்பிரமணியை மீட்ட சக ஊழியர்கள் அவரை முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பிரமணி அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுப்பிரமணிக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.